தஞ்சாவூர், ஜூலை 10-
தஞ்சாவூரில் 7 கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில பக்தர்கள் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த நெமிலிஸ்வரர் உழ வாரப்பணி திருக்கூட்டத்தை சேர்ந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத் துக்குட்பட்ட ராஜகோபாலசுவாமி கோயில், கொங்க னேஸ்வரர் கோயில், சங்கர நாராயணசுவாமி கோயில், கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், காசி விஸ்வ நாதர் கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், பிரதாப வீர அனுமார் கோயில் ஆகிய 7 கோயில்களிலும் உழவாரப் பணியை மேற்கொண்டனர்.
உழவாரப் பணிகளை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ.கவிதா துவக்கி வைத்தார். காலை முதல் மாலை வரை கோயில்களில் மண்டபம், பிரகாரம், சுவாமிகளின் சன்னதிகள், நந்தவனம் ஆகிய இடங்களில் சுத்தம் செய்து உழவாரப் பணிகளை மேற்கொண்டனர்.