districts

img

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்க!

திருச்சிராப்பள்ளி, பிப்.17- பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதர வாகவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை  ரத்து செய்ய வேண்டுமென வலி யுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செய லாளர் மாடசாமி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பாபு கோரிக்கை  விளக்க உரையாற்றினார். அரசு ஊழி யர் சங்க மாநில துணைத் தலைவர் ஆ. பெரியசாமி நிறைவுரையாற்றினார். இதேபோன்று தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு மற்றும் எம்ப்ளா யீஸ் பெடரேசன் சார்பில் தென்னூரில்  உள்ள மின்வாரிய தலைமை பொறியா ளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், எம்ப்ளாயீஸ் பெடரே சன் மாநிலச் செயலாளர் சிவசெல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  புறநகர் மாவட்டம் மருங்காபுரி வட்டம் சார்பில் துவரங்குறிச்சி பேருந்து  நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு அழகர்சாமி, விவசாயி கள் சங்க இளையராஜா ஆகியோர்  தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் அண்ணாதுரை. முரு கேசன், விவசாயிகள் சங்க பழனிச் சாமி, தியாகராஜன், கட்டுமான தொழிற் சங்க புறநகர் மாவட்ட தலைவர் சிதம்பரம் ஆகியோர் பேசினர். திருவெறும்பூர் திருவெறும்பூரில் நடைபெற்ற போ ராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கணேசன், மாநில நிர்வாகி முகமது அலி, மாவட்டச் செயலாளர் நடராஜன், ஒன்றியச் செய லாளர் குருநாதன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மல்லிகா, சிஐடியு குமார்,  பரமசிவம் ஆகியோர் தலைமை வகித்த னர். தொட்டியத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் சத்திய மூர்த்தி, நல்லுசாமி, தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செயலாளர்  ஏ.ரெங்கசாமி உரையாற்றினார். மாநி லச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட மையம் சார்பாக  வெள்ளிக்கிழமை மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.செங்குட் டுவன் தலைமை வகித்தார், அனைத்துத்  துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் செ.பிரகாஷ் கோரிக்கையை விளக்கி பேசினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் வே.சோமசுந்தரம் நிறைவுரையாற்றினார்.