districts

தந்தைக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர், ஜூலை 8-  

     தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாய் இறந்த நிலையில், 2015  ஆம் ஆண்டு முதல் இவரது தந்தை பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இதை அக்கம்பக்கத்தினர் கண்டறிந்து  பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து அச்சிறுமியின் தந்தையை 2019 ஆம் ஆண்டு கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ  சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதி பதி ஜி.சுந்தரராஜன் விசாரித்து சிறுமியின் தந்தைக்கு ஆயுள்  சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து  தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம்  இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.