மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் திருவாருர், ஜுன் 14- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள திருக்கொட்டாரம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி யில் 13 மாணவர்கள் ஒரே நேரத்தில் (டிசி) மதிப்பு சான்றிதழ் வாங்கியதால், சம்பந்தப்பட்ட பள்ளியை சிபிஎம் தலை வர்கள் நேரில் சென்று ஆய்வு செய்த னர். நன்னிலம் ஒன்றியம், திருக்கொட்டா ரம் ஊராட்சி கிராமத்தில் கு.ம.குரு சாமி பிள்ளை அரசு உதவி பெறும் நடு நிலைப் பள்ளி உள்ளது. கடந்த கல்வி யாண்டில் இப்பள்ளியில் 141 மாண வர்கள் கல்வி பயின்றனர். இப்பள்ளி யில் தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு துவங்கியதும், இப்பள்ளி மாணவர்கள் 13 பேர் ஒரே நேரத்தில் டிசி வாங்கி, வேறு பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும் பல மாணவர் கள் டிசி வாங்கும் நிலை உள்ளது. இதனை அறிந்த சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை யில், அப்பகுதி தோழர்கள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் வரத.வசந்தராஜன், கட்சி கிளைச் செயலாளர் வரத.வசந்தபா லன், ராமையன், பெருமாள் உள்ளிட் டோர் பள்ளிக்கு நேரில் சென்று நிர்வாகத் திடம் பேசினர். இதுகுறித்து பள்ளியின் நிர்வாக தரப்பில் கூறுகையில், “பள்ளி மாணவர் களுக்கு தேவையான அனைத்து உதவி களும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் கடந்த ஆறு மாதம் முன்பாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தூண்டுதலின் பேரில், இப்பள்ளியில் பணியில் உள்ள சில ஆசிரியர்கள் மாணவர்களிடம், இப்பள்ளியில் படித் தால் அரசின் சலுகைகள் கிடைக்காது. நலத்திட்டங்கள் பெற முடியாது என தவறான வழிகாட்டுதல் காரணமாகத் தான் டிசி பெற்று செல்வதாக சொல்லப் படுகிறது” என்றார். சிபிஎம் தலைவர்கள் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்வதை அறிந்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். பின்பு தொடர்ந்து மாண வர்களுக்கு எவ்வகையிலும் சிரமம் இல்லாமல் கல்வி கற்பதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக சிபிஎம் தலைவரிடம் தெரிவித்தனர். ஆய்வுக்குப் பின் சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தெரிவிக்கையில், “இப்பள்ளி மாணவர் கள் நலம் கருதி கு.ம.குருசாமி பிள்ளை நடுநிலைப் பள்ளியை அரசே எடுத்து நடத்த வேண்டும். இப்பள்ளிக்குச் செல்லும் நடைபாலம் இடிந்து எப் போது வேண்டுமானாலும் விபத்தும் ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே பாலத்தை ஆய்வு செய்து புதிய பாலத்தை உடனடியாக கட்ட அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இப்பள்ளி மாணவர்கள் வேறு பள்ளியை நாடிச் செல்லாத வகையில், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும். அரசு உதவிபெறும் பள்ளிக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு நலத் திட்டங் களை வழங்குவதாக தமிழ்நாடு முதல மைச்சர் தற்போது அறிக்கையில் தெரி வித்துள்ளார். இது தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை மேலும் உற்சா கப்படுத்தும்” என்றார்.