districts

சிபிஎம் போராட்டம் வெற்றி விதிமீறலில் ஈடுபடும் மணல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் உறுதி

தஞ்சாவூர், ஜூலை 11-

     தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நக ரத்தில், போக்குவரத்தை திணறடிக்கும் மணல் லாரிகளை ஒழுங்குபடுத்தக் கோரி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திரு வையாறு பேருந்து நிலையம் அருகே செவ்  வாயன்று சாலை மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

      இந்நிலையில், திருவையாறு பேருந்து  நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் ஏராளமானோர் திரண்டு ஆர்ப் பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சாலை மறி யலுக்கு தயாராகினர்.  இதையடுத்து அவர்  களிடம் திருவையாறு வட்டாட்சியர் பழனி யப்பன், திருவையாறு காவல் ஆய்வாளர் வனிதா, திருவையாறு காவல் உதவி ஆய்  வாளர் கலியபெருமாள், மரூர் காவல் உதவி ஆய்வாளர் சார்லி, நடுக்காவேரி காவல் உதவி ஆய்வாளர் மதியழகன், பொதுப் பணித்துறை பொறியாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.  

     இதில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா மற்றும் நிர்வாகிகள் உட்பட  50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். அப்போது, “காலை, மாலை பள்ளி,  அலுவலக நேரங்களில் நகரில் மணல் லாரி கள் நுழையாமல் தடுக்க வேண்டும். உரி மம் இல்லாத மணல் லாரிகளை அனு மதிக்கக் கூடாது. மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடிச் செல்ல  வேண்டும். லாரிகளில் வேகக் கட்டுப்பாடு,  ஒலிக் கட்டுப்பாட்டை முறையாக கடை பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட் டது.  

    பின்னர் வட்டாட்சியர் கூறுகையில், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை ஏற்று சாலை  மறியல் கைவிடப்பட்டது.