districts

img

தொடரும் கோடை மழை, கடற்சீற்றம் குமரியில் படகு போக்குவரத்து ரத்து

நாகர்கோவில், மே 21- கன்னியாகுமரியில் நீடிக்கும் கோடை மழைமற்றும் கடல் சீற்றம் காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் படகு போக்குவரத்துநிறுத்தப் பட்டது. அதுபோல் திற்பரப்பு அருவி யில் வெள்ளப்பெருக்கு நீடிக்கும் நிலையில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழையளவும் நீர்மட்டமும் மே 21 செவ்வாயன்று காலை 6 மணி  வரையிலான 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக முள்ளங்கினா விளையில் கனமழையாக 66.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் இதர பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) கன்னிமார் 12.2, கொட்டாரம்  27.6, மைலாடி 30.2, நாகர்கோவில் 21.2, ஆரல்வாய்மொழி 2.4, பூதப்பாண்டி 17.2, முக்கடல் அணை 19.2, பால மோர் 30.2,தக்கலை 39, அடையா மடை 52.2, குருந்தன்கோடு 24.6, கோழிப்போர் விளை 63.2, மாம்பழத் துறையாறு 34.6, சிற்றார் (1) 22.4, சிவலோ கம் (சிற்றார்-2) 19.2, களியல் 37, குழித்துறை 58.4, பேச்சிப்பாறை 25.6, பெருஞ்சாணி 21.8,புத்தன் அணை 23.6, சுருளகோடு 38.6, ஆனைக்கிடங்கு 34, திற்பரப்பு 27.8, கிள்ளியூர், செவ்வாயன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம்: அடைப்புக்குறிக்குள் முழு கொள்ள ளவு பேச்சிப்பாறை 45.07 (48) அடியாக இருந்தது. அணைக்கு விநாடி க்கு 518 கன அடிதண்ணீர் வரத் தாக இருந்தது. பாசன கால்வா யில் விநாடிக்கு 636 கன அடியும் உபரி நீர் 410கன அடியும் திறந்து விடப்படு கிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 49.45 (77) அடியாக உள்ளது. அணை க்கு 280 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. சிற்றார்- 1 இல் 11.61 (18) அடி உள்ளது. அணைக்கு 109 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. சிற்றார்- 2 இல் - 11.71 (18) அடி. அணைக்கு 161 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. பொய்கை யில் 15.4 (42.65) அடி. மாம்பழத்துறை யாறு அணையின் நீர் மட்டம் 14.44 (54.12) அடி. முக்கடல்அணையின் நீர்மட்டம் 0.4 (25) அடி நீர் உள்ளது.

;