அறந்தாங்கி, டிச.23 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு முன்னாள் கவுன் சிலர் ஆறுமுகத்தின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடை பெற்றது. இப்போட்டி பெரிய மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டு ரசித்த னர். இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையா ளர்களுக்கு ரூ.79 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பை களும், சிறப்பு பரிசாக கிடா குட்டியும் வழங்கப்பட்டது. ஆவுடையார்கோவில் காவல் துறையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.