districts

img

திருவாரூரில் புத்தகத் திருவிழா தொடங்கியது

திருவாரூர், ஜன.25 - திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள எஸ்.எஸ்.நக ரில் 3-ஆவது புத்தக திருவிழா வெள்ளிக் கிழமை மாலை தொடங்கியது. தொடக்க விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியி யல் பணிகள் கழக தலைவர் கலை மாமணி திண்டுக்கல் ஐ.லியோனி புத்தகத் திருவிழா அரங்கத்தை திறந்து  வைத்து “வாழ்வியல் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி னார். புத்தகத் திருவிழாவில், மாவட்ட  ஆட்சியர் தி.சாருஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வ ராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்  பூண்டி.கே.கலைவாணன், திருத்து றைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து ஆகியோர் புத்தகத் திரு விழாவின் நோக்கத்தை விளக்கி உரை யாற்றினர். புத்தகத் திருவிழாவில், தினந்தோ றும் காலை 10 மணி முதல் 4 மணி வரை  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்களுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும், மாலை 5 மணி  முதல் 6 மணி வரை கலைநிகழ்ச்சி களும், மாலை 6 மணி முதல் 8 மணி  வரை சிறப்புரைகள், பட்டிமன்றம், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறு கின்றன.