திருச்சிராப்பள்ளி, ஜூலை 2 -
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, விக்னேஷ் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆர்.பி.டி இணைந்து சனிக்கிழமை கல்லூரி வளாகத் தில் ரத்ததான முகாம் நடத்தின.
முகாமில் கல்லூரி மாணவர்கள், ஜோசன் கண் மருத்துவமனை, ரோட்டரி சங்க உறுப்பி னர்கள் பலர், சுமார் 120 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர். பின்னர் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் எக்ஸெல் குழும தலைவர் முருகானந்தம் வாழ்த்துரை ஆற்றினார். இதனை தொடர்ந்து கண்தானம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆர்பிஎஸ் குழும தலைவர் சுப்பிரமணி, ஜோசப் கண் மருத்து வமனை நிர்வாக அதிகாரி சுபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.