கும்பகோணம், ஆக.18-
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமையாள ருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை சிலர் மறைத்து வைத்து விற்பனை யில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரி களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதி காரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக கும்பகோணம் முழு வதும் ஆய்வுகளை மேற்கொண்டு வரு கின்றனர்.
இந்நிலையில், கும்பகோணம் குஞ்சித பாதம் தெருவில் உள்ள ஒரு குடோனில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த குடோ னில் ராஜஸ்தானைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரேமா தலைமையிலான குழுவி னர், அந்த பிளாஸ்டிக் பொருட்களை பறி முதல் செய்தனர். மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அந்த குடோனுக்கு சீல் வைத்தார். மேலும் இதனை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.