districts

முதல்வரின் கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சு.திருநாவுக்கரசர் கருத்து

புதுக்கோட்டை, ஜூலை 11-

    ஆளுநரின் விவகாரம் குறித்த முதல்வரின் கடிதத் திற்கு குடியரசுத் தலைவரும், ஒன்றிய அரசும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநி லத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., கூறியுள்ளார்.

    புதுக்கோட்டையில் திங்கள்கிழமை மாலை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆளுநரின் நட வடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குடி யரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஆட்சியே  போனாலும் கவலைப்பட மாட்டோம்’ எனக் கூறியிருப்பது  அவரது உறுதித்தன்மையைக் காட்டுகிறது. முதல்வர் எழுதியுள்ள கடிதம் குறித்து குடியரசுத் தலைவரும், ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பதைவிட ஏழை,  எளியவர்களுக்கு அந்தப் பணம் போய்ச் சேர வேண்டும்  என்பதுதானே அடிப்படை. இப்போது அரசிடம் இருக்கும் நிதிநிலையை கவனத்தில் கொண்டு எல்லா வகையான நலத் திட்டங்களுக்கும் பிரித்துத்தான் கொடுக்க முடியும்.  மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தில் யார் ஆளு கிறார்கள் என்பது பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் உரி மைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் அத்திட்டத்தை உறுதி யாக எதிர்க்கும்” என்றார்