districts

img

ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு

திருச்சிராப்பள்ளி/கரூர், பிப்.6 - ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு பட்ஜெட்டில், அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்களுக்கு ரூ.361 கோடியை குறைத்ததை கண்டித்தும், ஒன்றிய அரசு  உயர்த்தி அறிவித்து, 5 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள இன்சென் டிவை உடனே வழங்க வேண்டும். 5 வரு டங்களுக்கு முன்பு கொடுத்த செல்போ னுக்கு பதிலாக புதிய செல்போன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்  உதவியாளர்கள் சங்கம் சார்பில் திங்களன்று பட்ஜெட் எதிர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டப் பொருளாளர் ராணி  தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் அகிலா, அர்ச்சனா ஆகியோர் பேசினர். இதே போன்று மணிகண்டம், அந்தநல்லூர், தொட்டியம், தா.பேட்டை உட்பட 12  ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் வட்டாரத் தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார்.  கரூர் கரூர் ஊராட்சி ஒன்றியக் குழு அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர்  ராணி தலைமை வகித்தார். அங்கன் வாடி சங்க மாநிலத் தலைவர் ரத்தின மாலா, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், ஒன்றியச் செயலாளர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.  கரூர் பரமத்தியில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட நிர்வாகி கல்யாணி, மாவட்டச் செயலாளர் சாந்தி, குளித்தலையில் நடந்த போராட் டத்தில் மாவட்டத் தலைவர் பத்மா வதி, விவசாயத் தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் முத்துச் செல்வன் ஆகியோரும் கலந்து கொண் டனர். இதேபோன்று, கிருஷ்ணராய புரம்,தாந்தோணிமலை தோகைமலை, கடவூர் உள்ளிட்ட இடங்களிலும் போராட் டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.