நாகர்கோவில், ஜூலை 2
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கன்னி யாகுமரி மாவட்ட மக்கள் பயணம் செய் கின்ற முக்கியமான ரயில் ஆகும்.
சென்னையில் இருந்து கொல்லம் வரை செல்லும் இந்த ரயில் காலை மிக தாமதமாக நாகர்கோவில், இரணி யல் மற்றும் குழித்துறை ரயில் நிலை யங்களை வந்தடைகிறது. சென்னை யில் இருந்து இரவு 8 மணி 10 நிமி டத்திற்கு புறப்பட்டு திருநெல்வேலி, ஆரல்வாய்மொழி போன்ற இடங்களில் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு காலை 8.37 மணிக்கு மேல் நாகர் கோவில் டவுன் ரயில் நிலையம் வந்து கொண்டிருந்தது. இது பயணிகளுக்கு மிகவும் சிரமத்தை கொடுத்து வந்தது.
இந்த ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக் கள் கோரிக்கை விடுத்தனர். கன்னியா குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் வருகின்ற ஜூலை 7 முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் டவுன் நிலை யத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக காலை 8.07 மணிக்கு வந்தடைந்து காலை 8.12 மணிக்கு புறப்பட்டு செல் லும் வகையில் பயண நேரத்தை மாற்றி அமைத்துள்ளனர். அது போல இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களுக்கு தற்போது உள்ளதை விட 30 நிமிடங்கள் முன்னதாக சென்ற டையும். இந்த ரயில் காலை 10.10 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும் என அறிவித்துள்ளனர்.