திருவில்லிபுத்தூர், மார்ச் 25- தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணி குறித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்ட ணியிலுள்ள அனைத்து கட்சி கூட்டம் இராஜபாளை யம் நகரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டி யன் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிரச்சாரத்திற்காக மார்ச் 27 அன்று திருவில்லிபுத்தூர் வருகை தரும் தமிழக முதல்வ ருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அதிக அள வில் கூட்டணி கட்சி தொண்டர்களை கலந்து கொள்ள வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மார்ச் 28 அன்று இராஜபாளையத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத் தில் இந்தியா கூட்டணி கட்சியினரை பங்கேற்க வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் சிபிஎம் சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், இராஜபாளையம் நகரச் செயலாளர் மாரியப்பன், மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார், சுப்ர மணியன், செல்வராஜ், திமுக நகரச் செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, சிபிஐ ரவி விஜ யன், காங்கிரஸ் மதிமுக, விசிக, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, ஆதி தமிழர்கட்சி தமிழ்புலிகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை, மனித நேய ஜனநாயக கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி, தி.க உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டணி ஆலோசனைக் கூட்டம்