districts

img

விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 14-

     அரசு விடுதி மாணவர்களுக்கு உணவு படியை அதிகரித்து, தரமான உணவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழனன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஹரிபிரசாத் தலைமை வகித்தார். துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகி வைரவளவன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூரியா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், துப்புரவு சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  

     இறுதியாக மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கே.மோகன் பேசுகையில், “தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு இறைச்சியுடன் உணவு வழங்க உணவுப்படியை உயர்த்தி உள்ளது. ஆனால் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உணவுப்படியாக ரூ.35 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே தமிழக அரசு விடுதி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உணவுப் படியை உயர்த்த வேண்டும். இதனை வலியுறுத்தி அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளை ஒன்றுதிரட்டி ஆகஸ்ட் 10 அன்று பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளோம்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.