districts

img

தனியார் நிதி நிறுவனம் மோசடி - பொதுமக்கள் புகார்

தருமபுரி, டிச. 1- தனியார் நிதி நிறுவனம் முதலீட்டு பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றுவதா கக்கூறி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாள ரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக தருமபுரி அருகே உள்ள  இண்டூர் கிராம மக்கள் மாவட்ட காவல்  கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், இண்டூர், தளவாய் அள்ளி, போயர் தெரு,  சோம்பட்டி, மாரியம்பட்டி, திப்பட்டி, ராஜா  கொல்ல அள்ளி, பண்ட அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்ப குதி மக்களிடம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் கேஎம்ஜே தனியார் நிதி நிறு வனத்தில் பணிபுரிந்த  ஒடசல்பட்டியைச்  சேர்ந்த  கமலநாதன், இலளிகத்தைச் சேர்ந்த முருகன், செந்தில் நகரைச் சேர்ந்த அண்ணா துரை, ஒட்டப்பட்டியைச் சேர்ந்த செண்ப கவள்ளி ஆகியோர் கூலி வேலை செய்யும் பெண்களிடம் மாத, மாதம் பணம் செலுத் தினால் 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி  பணத்தை வசூல் செய்துள்ளனர்.

இப்ப ணம் செலுத்தியதற்கான ரசீதும் கொடுத் துள்ளனர்.  தற்போது 5 ஆண்டுகள் தவணை முடிந்த  நிலையில், நிதி நிறுவனத்தில் பணியாற் றியவர்கள் முதிர்வுப் பணம் தருவதாகக்கூறி அசல் ஆவணங்களைப் பெற்றனர். ஆனால்,  இதுவரை எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்ற னர். எனவே எங்களை ஏமாற்றியவர்க ளிடமிருந்து நாங்கள் செலுத்திய பணத்தை பெற்றுத் தந்து அவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி யுள்ளனர்.