districts

img

காவிரி ஆற்றின் உபரிநீரை அனைத்து ஏரிகளிலும் நிரப்பிடுக சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

தருமபுரி, நவ.23- காவிரி ஆற்றின் உபரிநீரை தருமபுரியி லுள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மாவட்டத்தின் பல இடங்களில் நடைபெற்றது.  காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக் கும் நிரப்பவேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். இத்திட்டத்தை நகர்ப் புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். வயது நிரம்பிய முதியோர்கள், கைம்பெண் கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தருமபுரி நகராட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும். தருமபுரி சிப்காட் பணியைத் துவங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.16 ஆம் தேதி முதல் நவ.21 ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்று வந்தது. அதன் இறுதி நாளான சனியன்று (நவ.21), தருமபுரி மாவட்டம் செங்கொடி புரம், பாலக்கோடு மற்றும் அரூர் உள் ளிட்ட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அதில், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.கிரைஸாமேரி, டி.எஸ்.ராமச்சந் திரன், எம்.முத்து, கே.என்.மல்லையன், சோ.அர்ச்சுணன், மாவட்டக் குழு உறுப் பினர்கள் ஏ.ஜெயா, பி.வி.மாது, சி.வேலா யுதம், வழக்கறிஞர் டி.மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;