தஞ்சாவூர், ஏப்.7- 2024 நாடாளுமன்றத் தேர்த லில் இந்தியா கூட்டணிக்கு ஆத ரவு அளிப்பது என தமிழர் தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப் பின் தலைமை செயற்குழு கூட் டம் தமிழர் தேசிய முன்னணி யின் நிறுவனத் தலைவரும்,
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ.நெடு மாறன் தலைமையில் சனிக் கிழமை நடைபெற்றது. ஏப்ரல் 19 அன்று முதல் இந் தியாவின் பல்வேறு மாநி லங்களில் நாடாளுமன்றத் தேர் தல் நடைபெற உள்ளது. மீண் டும் பாசிச பாஜக வெற்றி பெற் றால், எதிர்காலத்தில் ஜனநாய கமே நம்முடைய நாட்டில் நில வாது. பாசிச சர்வாதிகார, இந் துத்துவா ஆட்சி நிலைநிறுத் தப்படும். மத சிறுபான்மையினர் மற் றும் பொது சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவர்.
சமஸ்கிருத மொழியும், பண்பாடும் திணிக் கப்படும். மனித உரிமைகள் துச்சமாக மதிக்கப்பட்டு தூக்கி எறியப்படும். ஒட்டுமொத்த மாக நாட்டின் ஜனநாயகத் துக்கு நேரிடக் கூடிய பேரபா யத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமெனில், பாஜக கூட்டணியை அடி யோடு முறியடிக்க வேண்டும்.
அதற்குரிய வலிமையும், தற்போதைய சூழ்நிலையும் இந்தியா கூட்டணி தவிர வேறு எந்த அணிக்கும் இல்லை என் பது அப்பட்டமான உண்மை. எனவே இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்க ளிக்குமாறு, மக்களுக்கு தமிழர் தேசிய முன்னணி வேண்டு கோள் விடுக்கிறது என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி மாநிலத் தலைவர் முத்தமிழ்மணி, பொதுச் செய லர்கள், துணைத் தலைவர்கள், உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனா புரம் சி.முருகேசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.