districts

img

ஆவணங்களை அழித்தும், சாட்சிகளை கலைத்தும் ஊழல் துணைவேந்தரை காப்பாற்ற முயற்சி?

சேலம், ஜன. 11 - ஊழல் புகாரில் கைது செய்யப் பட்ட துணைவேந்தரைக் காப்பாற் றும் முயற்சியாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு,  கருப்புக் கொடி காட்டியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் மாணவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 200-க்கும் மேற்பட் டோரை போலீசார் கைதுசெய்தனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட  அரசு மற்றும் தனியார் கல்லூரி கள் இயங்கி வருகிறது.

இந்த பல் கலைக்கழகத்தின் துணைவேந்த ராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இவர், பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகளை செய்து வருவதாகவும், ஆர்எஸ் எஸ் - பாஜக தனக்கு ஆதரவாக இருக்கிறது என்ற தைரியத்தில், இந்த ஊழல் முறைகேடுகளை துணிந்து அரங்கேற்றுகிறார் என் றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, பூட்டர் பவுண்டே ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் களை பயன்படுத்தி தனியார் நிறு வனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக பேராசிரியர் கள், தொழிற்சங்கத்தினர் என அனைத்துத் தரப்பினரிடமிருந் தும் புகார்கள் எழுந்தன. சட்ட விரோதமாக பணியாளர்களை நிய மிப்பது; தகுதி இல்லாத ஆசிரியர் களை நியமிப்பது, பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு, ஆட்சி மன்றக் குழுவின் அனுமதி இல்லா மல் பல்வேறு தனியார் அமைப்பு களுக்கு பெரியார் பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி நடத்த அனு மதி அளிப்பது என துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன.

இதையடுத்து, பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு காரணங்களுக் காக துணை வேந்தர் ஜெகநாதன் மீது, ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், கூட்டு  சதி, மோசடி, போலி ஆவணங் களைத் தயாரித்தல், அரசு ஊழிய ராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 8 பிரிவுகளின் கீழ்  கருப்பூர் காவல்நிலைய போலீசார் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

எனினும், அவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனால், வெளியே வந்த துணைவேந்தர் ஜெகநாதன் வழக்கம்போல பல் கலைக்கழக நிர்வாகத்தில் தொட ர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இதற்கு பேராசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜெக நாதனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து, காவல்துறையும் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விரை வில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில்தான், ஆளுநர் ஆர்.என்.ரவி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப் போகிறேன் என்று அறி வித்தார்.

அப்போதே, ஆளுநரின் வருகை உள்நோக்கம் கொண்டது; குறிப்பாக, துணைவேந்தர் ஜெக நாதனின் ஊழல் தொடர்பான ஆவ ணங்களை அழிக்கவும், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பேராசிரி யர்கள் - ஊழியர்கள் உள்ளிட்ட  சாட்சிகளை கலைக்கவுமே அவர் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்; அனைத்து பேரா சிரியர்கள் மற்றும் பணியாளர்களு டன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரி வித்தனர்.

ஆளுநர் சேலம் வரக் கூடாது; அவ்வாறு வந்தால் அவரை பல்கலைக்கழகத்திற்குள் நுழையவிடமாட்டோம் என்று போராட்டமும் அறிவித்திருந்தனர். எனினும் மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து விமானம் மூலம் வியாழனன்று பிற் பகல் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வந்தார்.  முன்னதாக ஆளுநர் வரு கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக நுழை வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், திமுக மாணவர் அமைப்பு உள்ளிட்ட தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்ட மைப்பினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தமிழக ஆளுநரை கண்டி த்தும், பல்கலைக்கழக நிர்வாகத் தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாகி சரவணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரிய சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் மேவை.  சண்முகராஜா, செயற்குழு உறுப்பி னர் பி. ராமமூர்த்தி, இடைக்கமிட்டி செயலாளர்கள் எம். கனகராஜ், கே.எஸ். பழனிசாமி, ஈஸ்வரன் மற்றும் திமுக, தி.க. மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்டோரை  காவல்துறையினர் கைதுசெய்தனர்.  

இதன்பின், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த ஆளுநர் ரவி,  ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். மாணவர்களின் போரா ட்டத்தினால் சேலத்தில் பரபரப் பான சூழ்நிலை காணப்பட்டது.