districts

விஐடி பல்கலை பட்டமளிப்பு விழா இல.கணேசன் பங்கேற்பு

சென்னை, ஆக.22-

     விஐடி பல்கலை பட்டமளிப்பு விழாவில் 2,961 மாணவர்களுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பட்டம் வழங்கினார்.

    விஐடி பல்கலைக்கழகத்தில் சென்னை வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பட்ட மளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.

    பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சங்கர் விசுவ நாதன், சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் சந்தியா பென்டா ரெட்டி மற்றும் உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஐடி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராம்பாபு கோடாலி வரவேற்றார்.

    நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டு 33 மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் உட்பட 2,961 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் கவுரவ விருந்தினராக வால்மார்ட் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (இந்தியா) பாலு சதுர்வேதி கலந்து கொண்டார்.