districts

வேலூர் சிப்பாய் புரட்சி தின கருத்தரங்கம்

ராணிப்பேட்டை, ஜூலை 25-

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ராணிப்பேட்டையில்  சிப்பாய் புரட்சி தின நினைவு கருத்தரங்கம் மற்றும் தமிழ் வழியில் 10,12 ஆம் வகுப்பில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவு கேடயம் பாராட்டு விழா ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கிளை தலைவர் த. ரஜினி தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் க. கோபால் ராஜ் வரவேற்றார். கோ. குணசேகரன் நன்றி உரையாற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர் இரா. உமா, முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் முல்லை வாசன் ஆகியோர் உரை யாற்றினர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பு முன்னாள் மாவட்டச் செயலாளர் செ. சரவணன், தமுஎகச மாவட்டச் செயலாளர் லோ. ரஜினிகாந்த், மாவட்டப் பொரு ளாளர் ஆர். மணிகண்டன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, ஆசிரியர் உமா மற்றும் பலர் பேசினர்.