districts

img

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1.48 லட்சம் மாணவர்களுக்கு வேலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூலை 16-

     "தமிழகம் முழுவதும் “நான் முதல்வன்” திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்காக நடை பெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம்  பொறியியல் கல்லூரி மாணவர்களும், 83,223 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் என ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 267 மாணவர்கள்  வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர்" என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று (ஜூலை 16) முகாம் அலுவலகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி “சத்தியதேவ்” நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “சத்தியதேவ் லா அகாடமி”-யை தொடங்கி வைத்து, இலட்சினையை வெளி யிட்டார்.

   பின்னர் அகாடமி-யை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் பேசியது: "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமை களை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவித்து, அவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்று வழிகாட்டி வரு கிறது.

   அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமை யில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு “நான் முதல்வன்” திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 463 பொறியியல் கல்லூரிகளில் 4,72,972 மாண வர்களும், 861 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,51,338 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் 2022-23-ஆம் ஆண்டு “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 1,15,682 இறுதியாண்டு மாணவர்களுக்கு இது போன்ற 70-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

   கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 2,48,734 இறுதியாண்டு மாணவர்களுக்கு நிறுவனங்கள் மூலமாக, திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, இப்பயிற்சிகளின் மூலமாக மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 40 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் “நான் முதல்வன்” திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்காக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 65,034 பொறியியல் கல்லூரி மாண வர்களும், 83,223 கலை மற்றும் அறி வியல் கல்லூரி மாணவர்களும் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். எனவே, சட்டம் பயிலும் மாணவர்களுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க “சத்தியதேவ் லா அகாடமி” நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

நடிகர் சூர்யா நிறுவனம் உதவி

      இந்த அகாடமியில் சட்ட நிபுணர்கள் சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக் கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடங்களைக் காணொலியில் பதிவு செய்யப்பட்டு “யூ-டியூப்” வலைதளத்தில் பதிவேற்றப்படும். மாணவர்கள் அவற்றை கட்டணமின்றி பதி விறக்கம் செய்து படித்து பயன்பெறலாம். பாடத்திட்ட காணொலி தயாரிப்பதற்கான நிதியை ஜெய்பீம் படத்தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவின் “2D எண்டர் டெயின்மெண்ட்” நிறுவனம் வழங்கிட உள்ளது.

    இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா, தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர்  சுதன், அகாடமியின் இயக்குநர் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, கே.பி.சிவசுப்பிரமணியன், நடிகர் சூர்யா, 2D நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.