சென்னை, ஜூலை 9-
ஆவடி டியூப் ப்ராடக்ட்ஸ் தேர்தலில் 5ஆவது முறையாக எஸ்.கே.மகேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
ஆவடியில் உள்ள டியூப் ப்ராடக்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் டியூப் ப்ராடக்ட்ஸ் எம்ளா யிஸ் யூனியன் தேர்தல் சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெற்றது. மொத்த முள்ள 375 வாக்குகளில் 368 வாக்குகள் பதிவாகின. இதில் தொழிலாளர் நல அமைப்பு மகத்தான வெற்றி பெற்றது.
தலைவராக எஸ்.கே.மகேந்திரன், இணைத் தலைவராக ஜி.மகேந்திரன், செயலாளராக பி.பாஸ்கரன், துணைச்செயலாளராக ஆர்.வெங்கடேசன், துணைச் செயலாளராக என். வெங்கடேசலு, பொருளாள ராக டி.வெங்கடேசன் ஆகி யோர் வெற்றி பெற்றனர். இந்த ஆலையில் 5ஆவது முறையாக எஸ். கே.மகேந்திரன் வெற்றி பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.