districts

img

திருவள்ளுவர் பல்கலைக்கழக குளறுபடி: மாணவர் சங்கம் முற்றுகை

வேலூர். செப் 5 - வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் சேர்க்காட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 125-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் இயங்குகிறது. திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் தொடர்ச்சியாக தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல், மதிப்பெண் சான்றிதழில் தவறு தலாக பெயர், மதிப்பெண் மாறி யிருப்பது. தேர்வு முடிவுகளை முறையான நேரத்தில் வெளியிடாதது, மாண வர்களின் வருகை பதிவேடு குளறு படிகள், தேர்வு கட்டணம் செலுத்து வதில் குறைபாடு, போன்ற பல்கலைக்கழகம் தொடங்கிய 2007ஆம் ஆண்டிலிருந்து தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவர் சங்கம் சார்பில் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்க ளின் கல்வியை கேள்விக்குறி யாக்கும் பல்கலைக்கழகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் செவ்வாயன்று (செப்.5) நடை பெற்றது. மாநிலத் துணைத் தலைவர் தமிழ் பாரதி, மாணவர் சங்க வேலூர், திருவண்ணா மலை மாவட்டச் செயலாளர்கள் பெ. திலீபன் வெ.கோபிநாத், மாவட்ட நிர்வாகிகள் விஜய், சாரதி விக்னேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகிகளை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி துணைத் தலைவர் தமிழ் பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்க கவுரவத் தலைவர் அய்.இளங்கோவன் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து பேசினர். திருவண்ணாமலை திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் தேர்வு முடிவு குளறு படிகளை  கண்டித்து,  வேலூ ரில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு திருவண்ணா மலை அரசு கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்து, கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில்  முழக்கங்கள் எழுப்பினர்.