districts

கடலூரில் சதமடித்த வெயில்

கடலூர், மே 26-

     தமிழ்நாட்டில், கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த மே 4ஆம் தேதி முதல் சுட்டெரிக்கும் வெயிலால் அனல் காற்று அதிகமாக வீசுகிறது.

   இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் புயல் ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த கன மழை காரணமாக ஆங்காங்கே பயிர் வகை கள் நாசமாகின. இதனால் சில நாட்கள் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

   ஆனால் வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி வருகிறது. இதில் கடந்த மே 19ஆம் தேதி மற்றும் இரண்டு நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது.