districts

img

பள்ளி தொடர்பு திட்டம்

 சென்னை, ஆக.23-

       இந்தியாவில் பள்ளி தொடர்பு திட்டத்தின் 16வது பதிப்பை  கார்ட்டூன் நெட்வொர்க் மற்றும் போகோ குழந்தைகள் அலை வரிசைகள் அறிவித்துள்ளன.

    இந்த இரண்டு அலைவரிசைகளும் இணைந்து 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின்  ஈடுபாட்டை வளர்க்கவும் ஊக்கப்படுத்தவும் 16 நகரங்களில் உள்ள  சுமார்  1400 பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இதற்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.  

    இதேபோல் போகோ அலைவரிசை  குழந்தைகள் இடையே பல்வேறு வகையான கருணை குணத்தை ஊக்குவிப்பதற்காகவும், நேர்மறையான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்கும் வகையில் ‘Heroes of Kindness,’ என்னும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.