கள்ளக்குறிச்சி,ஜூலை 21-
தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் பல்வேறு துறையை சேர்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன் குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேலாண்மை இயக்கு நர் இன்னசென்ட் திவ்யா, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை செயலாளர் தரேஸ் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “பொது மக்கள் அளிக்கும் ஒவ்வொரு கோரிக்கை மனுக்களும் அவர்கள் வாழ்வில் உள்ள பிரச்சினையாகும். அதை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் கூறுவார். எனவே, ஒவ்வொரு அலுவ லர்களும் தங்கள் துறைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து பொது மக்களுக்கு உதவிட வேண்டும்”என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தும் அரசு அலுவலர்கள் தகுதியுள்ள எந்த ஒரு பயனாளியையும் விட்டுவிடாமல் முழுமை யாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் கடை கோடி மக்க ளுக்கு சென்று சேர்த்திட அரசு அலு வலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, திட்ட முன்னேற்றம் குறித்து, நிலு வைக்கான காரணங்கள் குறித்து சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்தி கேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.