செங்கல்பட்டு, ஜூலை 20-
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் வசித்து வந்தவர் பழனியப் பன் (வயது 52). இவர் கூவத் தூர் அடுத்த கீழார் கொள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மருத்துவமனைக்கு செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. புதனன்று கல்பாக்கம் அணுவாற்றல் துறை கடற்கரையில் உடலில் காயங்களுடன் மீட்பகப்பட்டதாக கல்பாக் கம் காவல்துறையினர் தெரிவித்தனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் நடுத் தூரை சேர்ந்தவர் ரேகா என்பவரின் மகன் சஞ்சய் (வயது 13) கடந்த 15ந் தேதி பள்ளிக்கு சென்ற சஞ்சய் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் புதனன்று சஞ்சய்யின் உடல் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இருவேறு இடங்களில் நிகழ்ந்த இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா? விசாரிக்கப் பட்டு வருகிறது.