கடலூர் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவல கத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் பல்வேறு அரிய வகை பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலை யில் அரசு அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதன்கிழமை முதல் அரசு அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் அரசு அருங்காட்சிய கத்தின் வெளியே இருந்த சாமி சிலைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, அதனை ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.