districts

img

குண்டும் குழியுமான சாலைகள்: சீரமைக்கக்கோரி நடைபயணம்

திருவண்ணாமலை,டிச.12- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், அலங்கார மங்கலம் கிராமம் கூட்ரோடு துவங்கி விளாப்பாக்கம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அதேபோல் அணியாலை கிராமத்தில் இருந்து பத்தியவாடி ஏரிக்கரை சாலை மிக மோசமான நிலையில் உள்ளது.  இந்த இரண்டு சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அலங்காரமங்கலம் மலை மேடு பகுதியில் இருந்து நடை பயணம் துவங்கி யது. கலசப்பாக்கம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்தது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.கே. வெங்கடேசன், டி.கே. வெங்கடேசன், எஸ். குமரன், தாலுகா செயலாளர் பி. சுந்தர் ஆகியோர்  உரையாற்றினர்.