கடலூர்,ஜூலை 6-
பொது போக்குவரத்தை பாது காக்க வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் புதிய தொழிலாளர்களை தேர்வு செய்ய வேண்டும், ஒப்பந்தத்தை முழுமையாக அமலாக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களை வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பாதிரிப்புலியூர் போக்குவரத்து பணிமனை முன்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது. தலைவர் எஸ். மணிகண்டன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராஜன், போக்குவரத்து சங்க சிறப்பு தலைவர் ஜி. பாஸ்கரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், விழுப்புரம் மண்டல துணை பொதுச் செயலாளர் எச்.ரகோத்தமன், துணை பொதுச் செயலாளர் பி.கண்ணன்,பொதுச் செயலாளர் பி. முருகன், துணைத் தலைவர்கள் எம். முத்துக்குமரன், ஏ.ஜான் விக்டர், பொதுச்செயலாளர் பி.முருகன், எஸ்.ராமமூர்த்தி, பொருளாளர் எம்.அரும்பாலன் ஆகியோர் உரையாற்றினர்.