districts

img

எடின்பர்க் பேராசிரியர்கள் சவீதா பல் மருத்துவ கல்லூரிக்கு வருகை

சென்னை, ஜூலை 14-

     சென்னை அருகே உள்ள சவீதா பல்  மருத்துவ கல்லூரிக்கு  ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் ஆப் எடின்பர்க் பேராசிரியர்கள்  வருகை தந்தனர்.

    இந்த கல்லூரியைச் சேர்ந்த பல் அறுவை சிகிச்சைத் துறை முதல்வர் பிலிப்  டெய்லர், பல் கல்விக்கான ஒருங்கி ணைப்பாளர் லோச்சனா நாணயக்கார மற்றும் பல் அறுவை சிகிச்சைத் துறை யின் துணை முதல்வர் கிராண்ட் மெக்கின் டைர் ஆகியோர் சவீதா பல் மருத்துவ கல்லூரிக்கு வருகை தந்து  உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்கள்.

    இங்கு வழங்கப்பட்டு சிகிச்சை முறை கள் மற்றும் கல்வி கற்பிக்கும் முறை ஆகியவற்றை பார்த்து அந்தக் குழு பார்வை யிட்டது. இவர்களது வருகை இரு கல்லூரிகளுக்கும் இடையிலான பல்வேறு  சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு உதவுவதோடு, கல்வி மற்றும் நோயாளி பராமரிப்பு முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கும்.  

    அத்துடன் கருத்துப் பரிமாற்றம் மற்றும் பல்வேறு அணுகுமுறைகளின் ஆய்வு ஆகியவை ஒட்டுமொத்த அறிவுத் தளத்தை மேம்படுத்துவதோடு, இந்தத் துறையில் நிபுணர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று சவீதா பல் மருத்துவக் கல்லூரி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.