மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகை எதிரே அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, சாய் சரவணகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.