districts

img

நந்திகிராம் கலவரத்துக்கு மம்தா பொறுப்பேற்பு

கொல்கத்தா, மே 19- இடது முன்னணி அரசாங்கத்தை கவிழ்க்க நந்திகிராமில் கலவரம் நடத்தி படுகொலைகளுக்கு தானே வியூகம் வகுத்ததாக பெருமை பேசிய மம்தா பானர்ஜி, அப்போது சுவேந்து அதிகாரியும் அவரது தந்தை ஷிஷிர் அதிகாரி யும் வீட்டில் பதுங்கிக் கொண்டதா கவும் கூறியுள்ளார். மம்தாவின் சொந்த மாவட்ட மான பூர்வா மேதினிப்பூரில் உள்ள  காண்டி மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் இதைத் தெரி வித்துள்ளார்.  கலவரத்தின் போது கட்சி ஊழி யர்களுடன் தான் இருந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடப்பது வரை அங்கு இருந்து வியூகம் வகுத்ததாக வும் தெரிவித்துள்ளார். அப்போது தந்தையும் மகனும் (சுவேந்துவும் தந்தை ஷிஷிர் அதிகாரியும்) வீட்டில் பதுங்கிக் கொண்டதாகவும் மம்தா குத்திக்காட்டினார். நந்திகிராம் சம்பவத்திற்குப் பிறகு 13 ஆண்டுகள் சுவேந்து  திரிணாமுல்லில் இருந்தார். இரண்டு முறை அமைச்சரானார். பாஜகவில் இணைந்த சுவேந்துவை எதிர்த்து 2021 சட்டமன்ற தேர்தலில் நந்திகிரா மில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். சுவேந்து இப் போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வராக உள்ளார். சுவேந்துவின் தம்பி சுமேந்து அதிகாரி காண்டி மக்கள வைத் தொகுதியில் பாஜக வேட்பா ளராக போட்டியிடுகிறார். இங்கு மே 25 இல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 2007 மார்ச் 14, அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். மாநிலம் முழுவ தும் வெடித்த கலவரம் இடது முன் னணி அரசாங்கத்தை வீழ்ச்சிய டையச் செய்தது. நந்திகிராம் கலவ ரத்தை முன்னின்று நடத்திய திரி ணாமுல் தலைவர்களான சுவேந்து அதிகாரி, அவரது தந்தை ஷிஷிர் அதிகாரி ஆகியோர் பாஜகவுக்கு தாவினர். மம்தா பானர்ஜி தன்னை சிபி எம்மை வீழ்த்திய வீராங்கனையாக தற்புகழ்ச்சி தேர்தல் பிரச்சாரம் நடத்தியுள்ளார். அதற்கு பதிலடி என் கிற பெயரில் சுவேந்து அதிகாரியும் மம்தா மீது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். நந்திகிராம் கலவரம் குறித்து இருவரும் பேசி வரும் விவ ரங்கள் மேற்கு வங்க வாக்காளர்க ளுக்கு பல உண்மைகளை உணர்த் துவதாக உள்ளது.

;