districts

சென்னை முக்கிய செய்திகள்

 கல்விக் கட்டண உயர்வை கண்டித்து பெற்றோர் மறியல்

சென்னை,செப்.25- கட்டண உயர்வை கண்டித்து  தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை யிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி இயங்கி வரு கிறது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, 1ம் வகுப்புக்கு ரூ.4 ஆயிர மாக இருந்த கட்டணம் ரூ.9,500 எனவும்,  5ம் வகுப்புக்கு ரூ.4,500 என இருந்த கட்ட ணத்தை ரூ.11,500 எனவும், 10ம் வகுப்புக்கு  ரூ.6 ஆயிரமாக இருந்த கட்டணத்தை ரூ.11 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், செவ்வாயன்று காலை பள்ளி முன்பு குவிந்தனர். திடீரென  பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொலைக்காட்சி செய்தியாளர் மரணம்: புதுவை முதல்வர் இரங்கல்

புதுச்சேரி, செப். 25- புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுச்சேரி செய்தியாளர் ஏ.அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52. ஊடகத்துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு களப்பணியாற்றிய செய்தி யாளர் ஏ.அப்துல் ரகுமான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (செப்,26) அதிகாலை காலமானார். காரைக்கால் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு  புதுச்சேரி ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்க செயலாளர்  தயாளன்,மூத்த செய்தியாளர்கள் தத்தா,பழனிராஜா,சதீஷ்,சார்லஸ், முருகன் உள்ளிட்ட திரளான செய்தியாளர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்துல் ரகுமான் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சட்டபேரவைத் தலைவர் செல்வம், எதிர்கட்சித் தலைவர் சிவா,முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம், மாமல்லபுரம்  ஒரு நாள் சுற்றுலா

சென்னை, செப். 25- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் காஞ்சிபுரம் - மாமல்லபுரம் ஒரு நாள் சுற்றுலா தொகுப்பு பயணம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒரு நாள் காஞ்சிபுரம் மாமல்லபுரம் சுற்றுலா பய ணத்தில் வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பேருந்து ஏகாம்பரநாதர் திருக்கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கைத்தறி பட்டு அங்காடிகள் செல்லும். அதன்பிறகு மாமல்ல புரம் 5 ரதம், கடற்கரை கோவில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, முட்டுக்காடு படகு குழாம் ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வை யிட்ட பின்னர் இரவு 7 மணிக்கு சுற்றுலா வளா கத்தை வந்தடையும். 10 இருக்கைகளுக்கு மேல் முன்பதிவு செய்ப வர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை உண்டு.  சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலை பேசி எண். 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலை பேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.