இழப்பீடு அறிவிக்காமல் வீடுகளை அகற்றக் கூடாது, மேம்பாலத்திற்கு தேவையான இடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பகுதியை குடியிருப்பு வாசிகள் நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொளத்தூர் பகுதி அவ்வை நகர் குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பு குழு சார்பாக விசிக, சிபிஐ, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் அவ்வை நகர் பாதுகாப்பு குழுவினர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் உதயகுமாரிடம் புகழேந்தி, ஞானரத்னம், ரமாபிரபா, சாகுல் அகமது, வீரபத்திரன், தமுமுக பகுதி செயலாளர் அப்துல் ரகுமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொளத்தூர் பகுதி செயலாளர் பா.ஹேமாவதி ஆகியோர் கோரிக்கை மனுவை வழங்கினர்.