districts

img

அணுமின் நிலைய ஊழியர்கள் போராட்டம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிரந்தர பணியிடங்களை உருவாக்கிடவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத  போராட்டம் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்  க. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.  போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநிலச் செயலாளர் செ. திருவேட்டை பேசினார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்டச்  செயலாளர் க. பகத் சிங் தாஸ், மாவட்ட துணைத் தலைவர்  பி. மாசிலாமணி, கல்பாக்கம் அட்டாமிக் எனர்ஜி ஒப்பத  ஊழியர்கள் சங்கத்தின்  பொருளாளர் செல்வகுமார், சென்னை அணு மின் நிலைய  ஊழியர் சங்கத் தலைவர் சின்ன கோவிந்தன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. சு.பாரதி அண்ணா, திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் குமார், சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நடராஜ் உள்ளிட்ட பலர்  பேசினர்.  போராட்டத்தை நிறைவு  செய்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் பேசினார்.