districts

img

பட்டா வழங்கி 8 மாதங்கள் கடந்தும் பயனாளிகளுக்கு இடத்தை ஒப்படைக்கவில்லை

திருவள்ளூர், டிச.18 - பட்டா வழங்கி 8 மாதங்கள் கடந்தும்   பயனாளிகளுக்கு இடத்தை ஒப்படைக்க வில்லை என்றும்  உடனடியாக இடத்தை  ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. திருவள்ளுர் வட்டம் கடம்பத்துார் ஒன்றியம் குமரச்சேரி ஊராட்சியில் நீர்  பிடிப்பு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக  இருளர் இனத்தை சேர்ந்த 23 குடும்பங்கள்    குடிசை அமைத்து வாழ்ந்து வரு கின்றனர்.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டத்தின் விளைவாக 8 மாதங்களுக்கு முன்பு  இருளர் இனத்தை சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு  பானம்பாக்கம் ஊராட்சியில் குடிமனை பட்டா வழங்கப் பட்டது. இதுவரை அந்த நிளத்தை அளவீடு செய்து உரியவர்களுக்கு வழங்கவில்லை. பட்டா வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் முட்புதர்கள் நிறைந்து காடு போன்று காணப்படுகிறது.  அந்த இடத்தை  சீரமைத்து அளவீடு செய்து பயனாளி களுக்கு  வழங்க வேண்டும் என மாவட்ட  ஆட்சியரிம் நான்கு முறை மனு கொடுத்துள்ள னர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொந்தமாக குடியிருப்புகள் இல்லாததால்  மிக்ஜாம் புயல் வெள்ளத்திலும் கடுமையாக பாதிப்பட்டு உள்ளனர். இந்த சூழலில் கடந்த திங்களன்று  (டிச.11),  திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலை வரிடம்  மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்  மனு அளித்துள்ளனர். ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ள இடத்தை அளந்து மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்,  18 இருளர் இன  மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க  வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.  இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில  துணைத்தலைவர் இ.கங்காதுரை, மாவட்டக் குழு உறுப்பினர் அற்புதம் உட்பட  பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.