விழுப்புரம், ஜூலை 6-
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பள்ளியம்பட்டு- அப்பம்பட்டு சாலை ரூ.32 லட்சத்தில் தார் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜய குமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தி யார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி வரவேற்றார்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.