districts

img

காணாமல் போன தட்டக்கல் ஏரி:கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

கிருஷ்ணகிரி டிச.2- போச்சம்பள்ளி வட்டம் நாகர சம்பட்டி அருகில் உள்ள  தட்டக்கல் கிழக்கு பகுதியில் 3 மலைகளுக்கு இடையே உள்ள தட்டக்கல் ஏரி  அதிகாரிகள் மெத்தனத்தால் மாய னது. தட்டக்கல்  ஏரி  53 ஏக்கர் பரப்பளவில்  ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை வரைபடத்தில் 1970 வரை இருந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு  தற்போது 5 ஏக்கர் கூட மிஞ்ச வில்லை.25 நாட்களுக்கும் மேலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  போச்சம்பள்ளி பகுதியில் பெய்து வரும் கன மழையால் பல ஏரிகள் நிறைந்து உபரி நீர் வெளியேறி ஊரே வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் தட்டக்கல் பெரிய ஏரியின் கரைகள் இன்னும் ஐந்து அடிக்கு மேல் தண்ணீர் நிற்கும் அளவுக்கு உயரமாக உள்ளது.  ஏரியின் 90 விழுக்காடு பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களின் தென்னை, மாந்தோப்புகள், வாழை த்தோட்டம், துவரை செடிகள்  வளர்த்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் சுயலாபத்திற்காக  ஏரிக்கரைகளை வெட்டி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். குறைந்த அளவு கூட தண்ணீர் நிற்க கூடாது என்பதற்காக அதன் சிறிய கரை வெட்டி உடைக்கப்படுகிறது.  தற்போது ஏரியில் தண்ணீர் வெளியேறி தட்டக்கல் சாலையில் நீர் செல்லும் சிறிய பாலம் உடைந்து சாலையும் பழுதானது.  

இந்த ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த 25 ஆண்டுகளாக பல முறை வட்ட,மாவட்ட நிர்வாகத்திடமும் மாவட்ட ஆட்சியரிடமும்கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஊராட்சி கூட்டங்களில்பல தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிபிஎம் போச்சம்பள்ளி வட்டக் குழு உறுப்பினர்  மாதலிங்கம், தற்போதைய வார்டு உறுப்பினர் ரங்கசாமி ஆகியோர் தெரிவித்தனர். மேலும் கடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள்  ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறு நடவடிக்கை கூட எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1997 ஜூலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் பியாரே இருந்தபோது தட்டக்கல் சாலை ஓரத்தில் இருளர் பழங்குடி மக்களுக்கு ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டம் நிதி மூலம் 12 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது. தற்போது அவர்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, கழிப்பிட வசதி, சாலை வசதிகள் எதுவும் கிடையாது. அனைத்து வீடுகள் பாழடைந்த நிலையில் மேற்கூரைகள் இடிந்து பக்கச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால் மழை காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர்  ஊற்று எடுத்து வருகிறது.  வீடுகளுக்கு முன்பு சேரும் சகதியுமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.

சில வீடுகள் தவிர அனைத்து வீடுகளிலும் வீட்டிற்கு இரண்டு மூன்று குடும்பங்கள் என  இருபத்து ஆறு குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர்.  இந்த வீடுகளை சீர்படுத்தி கழிப்பிடம், சாலை வசதிகள் செய்து கொடுக்க கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் இருளர் மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர். தட்டக்கல் பெரிய ஏரி ஆக்கிரமிப்பு களும்,கரை வெட்டி உடைக்கப்பட்டு ஏரிநீர் வீணாவதையும் பழங்குடி மக்கள் வீடுகளையும் போச்சம்பள்ளி மார்க்சிஸ்ட் கட்சி வட்ட குழு சார்பில் வட்டச்செயலாளர் சாமு உறுப்பினர்கள் பெரியசாமி கடலரசு  மாதலிங்கம் பார்வையிட வந்த அரசு அதிகாரிகளிடம் புகார் அளி த்தார். ஏரி ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றிடவும் , நீர் வெளியேறிய போது சாலையில் இடிந்த பாலத்தை சீர்படுத்திடவும்,சிதிலம் அடைந்துள்ள 12 இருளர் குடியிருப்புகளையும் சீர்படுத்தி கூட்டுக் குடும்பங்களாக நெருக்க டிக்குள் வாழும் மீதமுள்ள 15 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும். மேலும்  அடிப்படை சுகாதார வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வட்டக் குழு சார்பில் செயலாளர் சாமு கோரிக்கை விடுத்துள்ளார்.