அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்.கே. நகர் பகுதிக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கவுன்சிலர் பா.விமலா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எம்.கோடீஸ்வரி, செயலாளர் எஸ்.பாக்கியம், வழக்கறிஞர் தாரா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பகுதி பொருளாளர் பிரவீனா, கவுன்சிலர்கள் மணிமேகலை, குமாரி, தேவி, பவித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.