திருப்பூர், டிச.1- நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்தும், ஒன்றிய அரசு அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாடு முழுவதும் கண்டன நாள் கடைப்பிடிப்பது என்ற முடி வின்படி, திருப்பூர் மாநகராட்சி அலு வலகம் எதிரில் புதனன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தெற்கு மாநகர செய லாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். இதில், நாடு முழுவதும் குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங் களில் லவ் ஜிஹாத் என்ற பெயரிலும், பல்வேறு வழி களிலும் சிறுபான்மை மக்கள் குறி வைத்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எ.ச கிலா, வை.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.