districts

img

வாரிசுகளுக்கு வீட்டு மனை பட்டா பழங்குடி மக்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூலை 6-

    தொளவேடு கிராமத்தில் முன்னோர்கள் பெயரில் உள்ள வீட்டுமனை பட்டாக் களை தங்கள் வாரிசுகளின் பெயருக்கு மாற்றி தரவேண்டும் என தமிழ்நாடு வேட்டை க்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத் தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அருகில் உள்ள தொளவேடு கிரா மத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டைக் காரன் இனத்தை சேர்ந்த குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள வீடுகளின் பட்டாக்கள் பெரும்பாலும் முன்னோர்கள் பெயரிலேயே உள்ளது. இவர்கள் காலமானதால், முன்னோ ர்கள் பெயரில் உள்ள வீட்டுமனை பட்டாக் களை அவர்களின் வாரிசுகள்  பெயரில் மாற்றம் செய்து தரவேண்டும் என தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.வருவாய்த் துறை யினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

   தங்கள் பெயரில் பட்டா இல்லாததால் தொகுப்பு வீடுகள், வங்கி கடன் என எதையும்  பெறமுடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலை யில் பட்டாக்களை வாரிசுகள் பெயரில் மாற்றம் செய்து தரவேண்டும் என வலி யுறுத்தி புதனன்று (ஜூலை 5)  ஊத்துக் கோட்டை வட்டாட்சியரிடம் மனு அளித் துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டா ட்சியர் அடுத்த ஒரு மாதத்தில் பெயர் மாற்றம் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இதில் வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் இ.கங்காதுரை, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;