districts

ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு!

கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியின் 2 ஆம் வகுப்பு மாணவி சாராஸ்ரீ தேனியில் நடைபெற்ற தனியார் பள்ளிகளின் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவரை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி பாராட்டி புத்தகம் மற்றும் சான்று வழங்கினார்.