districts

img

தொகுப்பு வீடுகள் கட்டித் தர மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

வேலூர், மே 20- வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்க ளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட பேரவை கூட்டம் வேலூர் மாவட்ட அமைப்பாளர் சி.எஸ்.மகா லிங்கம் தலைமையில் நடை பெற்றது. மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன் தொடங்கி வைத்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், விதொச மாவட்டச் செயலாளர் செ.ஏகலைவன்,  மலை வாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜெய ராமன், துணை செயலாளர் காமராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். விக்ரமாசி மேடு பழங்குடி மக்களுக்கு வீட்டு மனை பட்டா கொடுத்து ஓராண்டு ஆகியும் ஒதுக்கப்பட்ட இடத்தை வட்டாட்சியர் உடனடியாக அடையாளம் காட்டி அளந்து தர வேண்டும். வீட்டுமனைப் பட்டா, சாதி சான்று, நலவாரிய அட்டை, சாலை, தெரு விளக்கு வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஜூன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவராக பி.நதியா, செயலாளராக சி.எஸ்.மகாலிங்கம், பொரு ளாளராக உஷா ஆகிய 17 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

;