சென்னை, ஜூன் 17 - தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய தமிழக தொல்லியல் துறை கடந்த காலங்களில் ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. அச்சமயத்தில் மத்திய தொல்லியல் துறை இயக்குநரின் இட மாற்றத்தால் தொல்லியல் துறையின் ஆலோசனை வாரியம் ஆன காபாவின் கூட்டம் நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அத னால் கடந்த ஜனவரியில் கிடைக்க வேண்டிய அனுமதி இந்த வாரம்தான் கிடைத்துள்ளது. இதையடுத்து ஐந்து கோடி ரூபாய் செலவில் தமிழகத்தின் பல இடங்களில், அடுத்தடுத்த வாரங்களில் அக ழாய்வைத் துவக்க தமிழகத் தொல்லி யல் துறை திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே அகழாய்வு செய்த இடங்களான சிவ கங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்மண்டி ஆகிய இடங்களில் இந்தாண்டும் அகழாய்வுப் பணி துவங்க இருக்கிறது. மேலும் புதிதாக தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ண கிரி மாவட்டம் சென்னனூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்யப்பட உள்ளது.
அதற்கான முதல் கட்ட வேலைகளில் அந்தந்தப் பகுதி அக ழாய்வு இயக்குநர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் சிறப்பையும் கால காலமாக வாழ்ந்த மக்களுடைய வாழ்வின் தொன்மங்களையும் பண் பாடு மற்றும் உற்பத்தி உறவுகளையும், அடையாளங்களையும் அகழாய்வு செய்வதன் மூலம் பல வகையான கடந்த கால உண்மைகள் வெளிப்படும் என்பதால் இத்தகைய ஆய்வுகளுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.