districts

img

தோண்ட தோண்ட கிடைக்கும் பழைய கட்டிட படிமங்கள்: கீழடி ஆகுமா வடலூர்

கடலூர், ஏப்.25- வடலூர் சத்திய ஞான சபை கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோன்றிய போது அதில் பழங்கால சுவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. வடலூர். வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் தோண்டும் பணி கள் நடந்து வந்தது. சத்திய ஞான சபைக்கு நிலம் கொடுத்த பார்வதிபுரம் கிராம மக்களின்  எதிர்ப்பை மீறி தற்போது கட்டுமான பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. சர்வதேச மையம் கட்ட தோண்டப் பட்டுள்ள அஸ்திவாரத்தில்  பழங்கால சுவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சுவர்களின் படிமங்கள் பழமையான  கற்களை கொண்டும், சுண்ணாம்பு கலவை யாலும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறப்படுகிறது. அந்த இடத்தில் இதற்கு முன் எந்த மாதிரியான கட்டிடம் இருந்தது என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் அந்த பகுதியில் தொல்லியல் ஆய்வு நடத்தி ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி தொல்லியல் ஆய்வு நடைபெற்றால் கீழடி போல் இங்கு பல அரிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.