திருவள்ளூர்,ஜூலை 11-
பொதுமக்கள் தங்க ளது வீட்டில் உள்ள மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனை பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. மேலும் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, கிரைண் டர், வாஷிங் மெஷின், டி.வி. கம்ப்யூட்டர் உள்ள மின்சா தன பொருட்கள் தொடர்ந்து பழுதாகி வருகின்றன. தொடர்ந்து மின்அழுத்தம் குறைவாக வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சோத்துபெரும்பேடு பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சோழவரம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர்.