சென்னையில் சிஐடியு நடத்தி வரும் அயனாவரம் நிர்மல் பள்ளிக்கு கரூர் மாவட்ட அங்கன்வாடி செயலாளர் என்.சாந்தி கடந்த ஒரு ஆண்டில் தனது சொந்த முயற்சியின் காரணமாக உறவினர்கள், நண்பர்கள் மூலம் சுமார் ரூபாய் 1 லட்சம் நிதி வசூல் செய்து வழங்கினார். அவரை சிஐயு கரூர் மாவட்ட ஒன்பதாவது மாநாட்டில் சங்க மாநில துணைத் தலைவர் பி.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.