செங்கல்பட்டு, செப். 14 விவசாயம் மற்றும் குடியிருப்பு நிலங்களை ஏலம் விடும் திருப்போரூர் கந்தசாமி கோயில் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று (செப்,14) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருப் போரூர் கிராம எல்லைக்குட்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்கள் சுமார் 400 ஏக்கரில் தங்கள் சொந்த நிலத்தில் வாழையடி வாழையாக நூற்றுக் கும் மேற்பட்ட விவசாயிகள் நூற்றாண் டுகளுக்கு மேலாக விவசாயம் செய்தும் வீடுகள் கட்டியும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலங்கள் 1886 ஆம் ஆண்டு முதல் சர்காரின் பதிவு துறையில் பதிவு செய்து அவர்களின் சுவாதீனத்திலும் அனுபவத்திலும் ஆண்டு அனுபவித்து வருகின்றனர். மேற்படி நிலங்களை கந்தசாமி கோவிலுக்கு சொந்தமானது என கோவில் நிர்வாகம் தொடுத்த வழக்கு களில் செங்கல்பட்டு கீழமை நீதி மன்றங்களில் இந்த நிலங்கள் கோவி லுக்கு உரிமை இல்லை என தீர்ப்பளித் துள்ளது. தற்போது இந்த வழக்கில் மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கோவில் நிர்வாகம் மேற்குறிப்பிட்ட நிலங்களை தம் அனுபவத்தில் இருப்ப தாக நீதிமன்றத்தில் பொய்களை கூறி குத்தகைக்கு ஏலம் விட நடவடிக்கை எடுக்கிறது. இது சட்டவிரோதமான தாகும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் வேறொரு வழக்கில் திருப்போரூர் கந்தசாமி கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும் என சர்வே எண்கள் குறிப்பிடாமல் விஸ் தீரணம் குறிப்பிடாமல் பொதுவாக கந்தசாமி கோவில் நலங்கள் என்று குறிப்பிட்டு இருப்பது தெளிவற்ற தீர்ப்பு என மக்கள் தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் திருப் போரூர் கிராம நில பட்டா எண் ஒண்ணில் உள்ள நிலங்கள் விவசாயி களுக்கு சொந்தமான நிலங்களாகும்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி நிலங்களை விட்டு வெளியேற்றும் நட வடிக்கையை கோயில் நிர்வாகம் எடுத்து வருவதை கைவிட வேண்டும், விவசாயிகள் மற்றும் குடியிருப் போர்களின் நில உரிமையை பாது காத்திட வலியுறுத்தியும், திருப்போரூர் நிலப்பட்ட ஒன்றில் உள்ள நிலங்கள் யாருக்கும் சொந்தம் என்று நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கோயில் நிர்வா கத்தின் அனைத்து விதமான சட்ட விரோத நடவடிக்கைகளும் தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் வி.அரி கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், முன்னாள் மாநில நிர்வாகி டி.கிருஷ்ண ராஜ், மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், திருப்போரூர் ஒன்றிய தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ஜி.மாரி உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் சாமி நடராஜன் பேசினார். முன்ன தாக செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் மாவட்ட வருவாய் அலுவலர் தலை மையில் உரிய விசாரணை நடத்தப் படும் மேலும் இந்து சமய அற நிலையத் துறையின் மூலமாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும் அது வரையிலும் ஏலம் விடும் நட வடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.